நான் செந்தில்வேல். ஐடி துறையில் பிடெக் படிக்கிறேன். எனக்கு சிடிஎஸ் தேர்வுப் பற்றி அறிய ஆசை. நான் எப்போது அதை எழுதலாம்? அதற்கான நடைமுறைகள் என்ன? அதற்கான தகுதிகள் என்ன? அதற்கான புத்தகங்கள் ஏதேனும் கிடைக்கின்றனவா? | Kalvimalar - News

நான் செந்தில்வேல். ஐடி துறையில் பிடெக் படிக்கிறேன். எனக்கு சிடிஎஸ் தேர்வுப் பற்றி அறிய ஆசை. நான் எப்போது அதை எழுதலாம்? அதற்கான நடைமுறைகள் என்ன? அதற்கான தகுதிகள் என்ன? அதற்கான புத்தகங்கள் ஏதேனும் கிடைக்கின்றனவா?ஜனவரி 20,2012,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்திய மிலிட்டரி அகடமி, ஆபிசர் ட்ரெய்னிங் அகடமி, நேவல் அகடமி மற்றும் ஏர்போர்ஸ் அகடமி ஆகியவற்றில் ஆட்களை சேர்ப்பதற்காக, மத்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷன், வருடத்திற்கு 2 முறை நடத்தும் தேர்வே சிடிஎஸ் எனப்படும் கம்பைன்ட் டிபன்ஸ் சர்வீசஸ் தேர்வாகும். இத்தேர்வுக்கான அறிவிப்புகள் வழக்கமாக, அக்டோபர் மற்றும் ஜீன் மாதங்களில் வெளியாகின்றன. தேர்வுகள், பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்படுகின்றன.

திருமணமாகாத பட்டதாரிகள் மட்டுமே இத்தேர்வை எழுத தகுதியானவர்கள். எஸ்எஸ்பி எனப்படும் சர்வீஸ் செலக்ஷன் போர்டு நடத்தும் நேர்முத் தேர்வுக்குப் பின்னர், தகுதியானவர்கள், அந்தந்த அகடமிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

சிடிஎஸ் தேர்வுக்கான தகுதிகள்

ஐஎம்ஏ மற்றும் ஆபிசர் டிரெய்னிங் அகடமி - அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பட்டம்

இந்திய நேவல் அகடமி  - பொறியியல் பட்டம்

ஏர்போர்ஸ் அகடமி  -  பள்ளி படிப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகியவற்றோடு, ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகப் பட்டம் அல்லது பொறியியல் பட்டம்.

வயது தகுதி

ஐஎம்ஏ - 19-24 வயதுக்குள் திருமணமாகாத ஆண் பட்டதாரிகள்.

இந்திய நேவல் அகடமி  -  19-22 வயது வரையான திருமணமாகாத ஆண்கள்.

ஏர்போர்ஸ் அகடமி  -  19-23 வயதுவரையான திருமணமாகாத ஆண்கள்.

ஆபிசர்ஸ் ட்ரெய்னிங் அகடமி  -  19-25 வயதுவரையான திருமணமான அல்லது ஆகாத ஆண்கள்.

பல முக்கிய புத்தக கடைகளில், சிடிஎஸ் தேர்வுக்கு படிப்பதற்கென்றே, ஏராளமான புத்தகங்கள் கிடைக்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us